22 முறை நேரடி மோதல்!.. ஜெயிச்சது யாரு தெரியுமா..?

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் டாப் ஸ்டார் பிரசாந்த் படங்கள் 22 முறை நேரடியாக மோதியுள்ளன. இவற்றில் வெற்றி யாருக்குன்னு பார்க்கலாமா…

வான்மதி – கல்லூரி வாசல்

1994 ஆகஸ்ட்டுல பிரசாந்துக்கு செந்தமிழ் செல்வன், அஜீத்துக்கு பவித்ரா ரிலீஸ். இதுல பிரசாந்துக்குத் தான் வெற்றி. 1996 ஜனவரியில் அஜீத்துக்கு வான்மதி, பிரசாந்துக்கு கல்லூரி வாசல் ரிலீஸ். இதுல வான்மதி தான் சக்சஸ்.

1996 ஜூன்ல அஜீத்துக்கு மைனர் மாப்பிள்ளையும், பிரசாந்துக்கு கிருஷ்ணா படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி. 1997 ஜனவரில அஜீத்துக்கு நேசம், பிரசாந்த்துக்கு மன்னவா ரிலீஸ். இதுல பிரசாந்த் படம் தான் வெற்றி.

ஜீன்ஸ் – காதல் மன்னன்

1998 ஏப்ரல் பிரசாந்த்துக்கு ஜீன்ஸ், அஜீத்துக்கு மார்ச்ல காதல் மன்னன், அவள் வருவாளா படங்கள் ரிலீஸ். அஜீத் படங்களும் வெற்றி தான். ஆனா பிரசாந்த்துக்குத் தான் மெகா வெற்றி. 1998 ஆகஸ்ட்டுல பிரசாந்துக்கு கண்ணெதிரே தோன்றினாள், அஜீத்துக்கு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படமும் ரிலீஸ். அஜீத்துக்கும் மிகப்பெரிய வெற்றி. பிரசாந்த்துக்கும் மிகப்பெரிய வெற்றி.

வாலி – பூமகள் ஊர்வலம்

1998 ஏப்ரல்ல அஜீத்துக்கு வாலி படமும், பிரசாந்துக்கு பூமகள் ஊர்வலம் படமும் ரிலீஸ். இதுல அஜீத்துக்குத் தான் மெகாவெற்றி. 1998 டிசம்பர்ல அஜீத்துக்குத் தொடரும் படமும், பிரசாந்துக்கு காதல் கவிதை படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி.

1999 ஆகஸ்ட்டுல அஜீத்துக்கு அமர்க்களம், நீ வருவாய் என என 2 படங்கள் ரிலீஸ். பிரசாந்துக்கு ஜோடி ரிலீஸ். இதுல பிரசாந்த் படம் வெற்றி. அஜீத் படங்கள் தான் மெகா வெற்றி. 2000 பிப்ரவரியில் அஜீத்துக்கு முகவரி, பிரசாந்த்துக்கு குட்லக் படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி.

அப்பு – உன்னை கொடு என்னை தருவேன்

2000 மே மாதம் பிரசாந்த்துக்கு அப்பு படமும், அஜீத்துக்கு உன்னை கொடு என்னை தருவேன் படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி. 2001 ஜனவரியில் அஜீத்துக்கு தீனா. பிரசாந்துக்கு பிரியாத வரம் வேண்டும் ரிலீஸ். இதுல பிரசாந்த் வெற்றி. ஆனா அஜீத்துக்குத் தான் மெகா வெற்றி.

2001 ஜூன்ல அஜீத்துக்கு சிட்டிசன், பிரசாந்துக்கு ஸ்டார் படம் ரிலீஸ். இதுல அஜீத்துக்குத் தான் வெற்றி. 2001 ஆகஸ்ட்டுல அஜீத்துக்கு பூவெல்லாம் உன் வாசம், பிரசாந்துக்கு சாக்லெட் படமும் ரிலீஸ். இரண்டுமே ஹிட்னாலும் சாக்லெட் தான் ஒரு படி அதிகமான வெற்றி.

மஜ்னு – ரெட்

2001 டிசம்பரில் பிரசாந்துக்கு மஜ்னு படமும், அஜீத்துக்கு ரெட் படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி. 2002 நவம்பரில் அஜீத்துக்கு வில்லன், பிரசாந்துக்கு விரும்புகிறேன் ரிலீஸ். இதுல அஜீத்துக்குத் தான் மெகாவெற்றி.

2003 செப்டம்பர்ல பிரசாந்துக்கு வின்னர், அஜீத்துக்கு ஆஞ்சநேயா ரிலீஸ். இதுல வின்னர் பிரசாந்த் தான். 2005 ஜனவரியில் பிரசாந்துக்கு லண்டன் படமும், அஜீத்துக்கு ஜி படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வெற்றி.

வரலாறு – ஜாம்பவான்

2006 செப்டம்பர்ல அஜீத்துக்கு வரலாறு, பிரசாந்துக்கு ஜாம்பவான் படமும் ரிலீஸ். இதுல பிரசாந்துக்கு பிளாப். அஜீத்துக்குத் தான் மெகா வெற்றி. 2006 டிசம்பர்ல அஜீத்துக்கு ஆழ்வார், பிரசாந்துக்கு தகப்பன்சாமி, அடைக்கலம் ரிலீஸ். இதுல 3 படமும் பிளாப்.

என்னை அறிந்தால் – புலன்விசாரணை 2

2015 ஜனவரியில் அஜீத்துக்கு என்னை அறிந்தால், பிரசாந்துக்கு புலன்விசாரணை 2 படமும் ரிலீஸ். இதுல பிரசாந்துக்கு பிளாப். அஜீத்துக்கு வெற்றி. 2018 டிசம்பர்ல அஜீத்துக்கு விஸ்வாசமும், பிரசாந்துக்கு ஜானி படமும் ரிலீஸ். இதுல பிரசாந்த்துக்கு பிளாப். அஜீத்துக்கு மெகா வெற்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!