#BREAKING : பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சரத்பாபு. இவர் தெலுங்கில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

குறிப்பாக தமிழில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது 71 வயதாகும் இவர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்

றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!