அரசப்பட்டி முதல் அமெரிக்கா வரை… நாடு விட்டு நாடு சென்று பட்டம் பெற்ற மதுரை முத்து.!

அரசப்பட்டி முதல் அமெரிக்கா வரை… நாடு விட்டு நாடு சென்று பட்டம் பெற்ற மதுரை முத்து.!

தமிழகத்தின் முதல் stand up comedian – மதுரை முத்து

மதுரை முத்து அவர்கள் தமிழகத்தின் முதல் stand-up காமெடியன்.  முதல் முதலாக stand-up காமெடியை தொலைகாட்சியில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். M.com பட்டதாரியான இவர்.  மதுரை, திருமங்கலம் அருகே உள்ள T.அரசபட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல் கலைத்துறைக்கு வந்து தனது கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்.

2005ல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது கலைப்பயணத்தை துவங்கிய இவர் கலைத்துறையில் 18 ஆண்டுகள் பயணம் செய்து, இதுவரை 80 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார், உள்ளூர், வெளியூர் என 6000 திற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டவர்.

எந்தவித குறிப்பும் கையில் இல்லாமல் 4 மணி நேரத்திற்கு மேல் நகைச்சுவையாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

கலக்கபோவது யாரு, அசத்தபோவது யாரு, சண்டே கலாட்டா, காமெடி ஜங்ஷன், குக் வித் கோமாளி என்று 1300 எபிசோடுகளுக்கு மேலாக தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கலக்கபோவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகிய இரண்டு நிகழ்ச்சியிலும் காமெடி கிங் என்று Title Winner பட்டம் வென்ற ஒரே கலைஞன் இவர் மட்டுமே. சின்னக்கலைவாணர் விருது, நகைச்சுவை சக்கரவர்த்தி விருது உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறார். 15 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

“பிறரை சிரிக்க வைப்பவர்களை ஆண்டவன் அழ வைப்பான்” என்று சார்லி சாப்ளினின் கூறியதை போல, இவரது சொந்த வாழ்வில் கடும் சோதனைகள் ஏற்பட்ட பொழுதும் அதில் இருந்து மீண்டு, தன் குழந்தைகளுக்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும் மீண்டும் கலைபாதையில் பயணித்து முத்திரை பதித்து வருகிறார். பட்டிமன்ற நடுவராக இருந்து தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்களை மேடை ஏற்றிவிட்டு அழகு பார்த்தவர்.

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் stand-Up காமெடியனாக தொடங்கிய கலைப்பயணம். இன்று அதே நிகழ்ச்சியின் Judge ஆகா உயர்ந்து கலக்கி வருகிறார்.

stand-up காமெடியை நமக்கு அறிமுகப்படுத்தியதை போல, குக் வித் கோமாளியில் பங்கேற்று property காமெடி எனும் புதிய தனித்துவமான நகைச்சுவை யுக்தியை நமக்கு அறிமுகப் படுத்தி மக்களை மகிழ்விக்கிறார்.

மதுரைவீரன், அகிலன், சபாபதி, குற்றம்குற்றமே, பாபா பிளாக்-சீப் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். மதுரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடிகர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்.

தனது சீரிய முயற்சியால் யாழ் இசைக்குழு எனும் இசை கச்சேரி குழு அமைத்து அதன் மூலம் இசையும்-சிரிப்பும் சேர்ந்தே கொடுத்து அசத்தி வருகிறார். மேலும் அதன் மூலம் நலிந்த இசைக்கலைஞர்களுக்கு உதவி, அவர்களுக்கு புத்தாக்கம் தருகிறார்.

பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும். 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்களையும், கலைஞர்களையும் வைத்து பட்டிமன்றமும், பல்சுவை-கலை நிகழ்சிகளும் நிகழ்த்தி,  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பு மக்களையும் தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

இந்த 2025 ஆம் வருட தீபாவளி திருநாளை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். இதே போல் உலகெங்கும் பரவி வாழக்கூடிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வந்தனர் அந்த வகையில் வட அமெரிக்கா அட்லாண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் சங்கங்கள் மூலம் எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி – 2025 என  பண்டிகை  கொண்டாடப்பட்டதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை முத்து கலந்து கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அவருக்கு வட அமெரிக்கா ஜார்ஜியாவில் அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் சார்பாக ‘சின்னத்திரை நகைச்சுவை மன்னன்’ என பட்டம் வழங்கி கௌரவித்தனர். மதுரை முத்து அவர்கள் தமிழகத்தில் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருந்தாலும் உலகம் முழுமைக்கும் பெருமை சேர்க்கக் கூடிய விதமாக அமெரிக்கா தேசத்தில் பட்டம் பெற்றிருப்பதை நகைச்சுவை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறை, அரசியல் துறை உட்பட உலகத் தமிழர்கள் மத்தியிலும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!