திருவண்ணாமலை கோவிலில் பிரபல நடிகர் சாமி தரிசனம்… பக்தர்கள் செல்பி எடுத்து ஆரவாரம்!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை மார்கழி மாதம் பிறந்த நிலையில் நேற்று நடிகர் யோகி பாபு அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


R.K. சுரேஷ் இந்திய திரைப்பட நடிகரான இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். இவர் திரையுலக பயணத்தை 2012-ம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். இவர் பல திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து, பின்னர் 2018-ம் ஆண்டு பில்லா பாண்டி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராக ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திரைப்பட தயாரிபாளரும் நடிகருமான R.K. சுரேஷ் கிரிவலம் வந்தார். அதைத் தொடர்ந்த இன்று குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்னர், அம்மன் சன்னதி முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டார். அதனை தொடர்ந்து, அவருக்கு சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு, பாஜக மாநில இணை அமைப்பாளர் டி.எஸ் சங்கர், திருவண்ணாமலை நேதாஜி மற்றும் ரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.