
டிரெண்டாகும் ‘செக்ஸ் வீடியோ அண்ணாமலை’ ஹேஷ்டேக்… பாஜகவினர் அதிர்ச்சி!
உலகில் சமூகவலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். அன்றைய தேதியில் கொண்டாடப்படும் அல்லது விமர்சிக்கப்படும் விஷயங்கள் என்னவோ அவற்றை நெட்டிசன்கள் டிரெண்டாக்குவார்கள்.
அதன்படி, டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் தற்போது எக்ஸ் வலைதளத்தில் ‘செக்ஸ் வீடியோ அண்ணாமலை’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த ஹேஷ்டேக் திடீரென டிரெண்டாக என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், பாஜகவினர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஏற்கெனவே வெளியான பழைய வீடியோக்களை பலரும் பகிர்ந்து இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற அண்ணாமலை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் வெள்ள மீட்பு பணிகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவினர் இதனை டிரெண்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஹேஷ் டேக் எதற்கு டிரெண்டாகிறது என்பதே தொியாமல் அரசியல் கட்சி தலைவா்களும், நெட்டிசன்களும் இது குறித்த கேள்விகளை எழுப்பி மேலும் வைராலாக்கி வருகின்றனா். இந்த ஹேஷ் டேக்கால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.