திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா – 3 ஆண்டுகளுக்குப் பின் கலை நிகழ்ச்சிகளுடன்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற26-ந்தேதி கொடி யேற்றத்துடன் பங்குனிபெருவிழாதொடங்குகிறது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளாக8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி மகா தேரோட்டமும் நடக்கிறது

பங்குனி பெருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்த போதிலும், இந்த கோவிலுக்கு என்று உகந்த திருவிழாவாக பங்குனிப் பெருவிழா போற்றப்படுகிறது.கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார். ஆகவே பங்குனி பெருவிழாவின் 13-வதுநாளில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. முருகப்பெருமானின் தாய் தந்தையர்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பங்கேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்கள். இத்தகைய நிகழ்வு காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா வருகின்ற 26-ந்தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான 26 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 – 15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27ந்தேதி (திங்கிட்கிழமை) விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது.

தினமும் ஒரு வாகனம்:

திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுளி நகர் வீதிகளில் வலம்வருதல் நடக்கிறது. இதேபோல திருவிழாவின் முதல் நாள் 28-ந்தேதி இரவு 7 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்திலும்,
2-ம் நாள் (29-ந்தேதி) வெள்ளி பூத வாகனத்திலும்,
3-ம் நாள் (30-ந்தேதி) அன்ன வாகனத்திலும், 4-ம் நாள் (31-ந்தேதி) சேஷ வாகனத்திலும், 5-ம் நாள் (ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,
6-ம் நாள் (2-ந்தேதி)தங்க மயில் வாகனத்திலும்,
7-ம் நாள். (3-ந்தேதி)வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும்,
8-ம் நாள் (4-ந்தேதி) பச்சைக் குதிரை வாகனத்திலும்,
9-ம் நாள் (5-ந்தேதி)தங்க குதிரை வானத்திலும்,
10-ம்நாள் (6-ந்தேதி)தங்கமயில் குதிரை வாகனத்திலும்,
11-ம் நாள் (7-ந்தேதி) பச்சை குதிரை வாகனத்திலும்,
12-ம் நாள் (8-ந்தேதி)வெள்ளி யானை வாகனத்திலும்,
13-ம் நாள்(9-ந்தேதி) திருத்தேரிலும்,
14-ம் நாள் (10-ந்தேதி)தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருக்கல்யாணம் மகாதேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக

அடுத்த (ஏப்ரல்) மாதம் 1-ந்தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ந்தேதி

(புதன்கிழமை) பங்குனி உத்திரம், 6-ந்தேதி (வியாழக்கிழமை) சூரசம்கார லீலை,

7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) பட்டாபிஷேகம்,

8-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள்திருக்கல்யாணம்,

9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6மணிக்கு

மேல் 6 -15 மணிக்கு கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.

3 ஆண்டுகளுக்கு பிறகு கலைநிகழ்ச்சி:

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவில் பட்டிமன்றங்கள்,கலை நிகழ்ச்சிகள் பக்தி சொற்பொழிவுகள்,இன்னிசை கச்சேரிகள் என்று 15 நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனாவைரஸ் பரவலின் காரணமாகபங்குனிப் பெருவிழா ரத்து செய்யப்பட்டது. அதனால்கலை நிகழ்ச்சிகளும் ரத்தானது. இந்த நிலையில் 2021-ல் பங்குனிப் பெருவிழா சிறப்பாக நடந்தபோதிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டில் (2022- ல் ) வெகு விமர்சையாக பங்குனி திருவிழா நடைபெற்ற போதிலும்கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டன. அதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்போர்களுக்கு வருமானம் பாதித்தது. திருவிழாவிற்காக கலைநிகழ்ச்சி உபயம் செய்யக்கூடிய உபயதாரர்கள் மனம் இறுக்கம் அடைந்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் (2023-ல்) மீண்டும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளை செய்துவருகிறது. இதைபக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒரு திருவிழா 3 அழைப்பிதழ்: திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை தெப்பத்திருவிழா, கந்த சஷ்டி திருவிழா ஆகிய முக்கிய திருவிழாக்களுக்கு ஒரு அழைப்பிதழ் பத்திரிக்கைவழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பங்குனி பெருவிழாவிற்கும் வழக்கமான மஞ்சள் நிற பத்திரிக்கையுடன் ஒரு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக வழக்கமான மஞ்சள் நிற பத்திரிக்கை, திருவிழா விபரம்குறித்த பத்திரிக்கை, திருவிழாவிற்கானகலை நிகழ்ச்சிகள் பத்திரிக்கை என்று ஒரு விழாவிற்கு 3 அழைப்பிதழ் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகிறது. அதில் வண்ணமயமான 2 டிஜிட்டல் பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டில் முதல்முறையாக திருவிழா பத்திரிக்கை,திருவிழாவிற்கான கலைநிகழ்ச்சி பத்திரிக்கை என்று 2டிஜிட்டல் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா, சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!