தாய், தந்தைக்கு கோவில் கட்டிய மகன்கள்

தங்களது பெற்றோரை உயிருக்கு உயிராக நேசித்த அவரது மகன்கள்

திருப்பதி:ஆந்திர மாநிலம், ஆதோனி, புத்தேகல்லு பகுதியை சேர்ந்தவர் பூசாரி உருகுந்தப்ப சாமி. இவரது மனைவி பண்டாரி சந்தனம்மா. தம்பதிக்கு சுப்பு, மல்லிகார்ஜுனா, மணிகண்ட சாமி என்ற 3 மகன்கள் உள்ளனர்.

புத்தேகல்லு கிராமத்தில் பிறந்த பூசாரி உருகுந்தப்ப சாமி மும்பைக்குச் சென்று அங்கு வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் அவருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்ததால் அவரது சொந்த ஊரில் விவசாய நிலங்களை வாங்கினார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரி சந்தனம்மா உடல் நிலை குறைவு காரணமாக இறந்தார்.

தங்களது பெற்றோரை உயிருக்கு உயிராக நேசித்த அவரது மகன்கள் ரங்கப்பா காட்டு பகுதியில் 25 சென்ட் இடத்தை வாங்கி அவரது தாயாரின் உடலை தகனம் செய்தனர்.கொரோனா தொற்று காரணமாக இறந்த தனது தந்தையின் உடலையும் அவரது தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தகனம் செய்தனர்.

இதையடுத்து தனது பெற்றோருக்கு கோவில் கட்ட அவரது மகன்கள் முடிவு செய்தனர். பெற்றோர் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறையின் மீது ரூ.30 லட்சத்தில் கோவில் கட்டினர். மேலும் பெற்றோரின் சிலைகளை வடிவமைத்து நேற்று முன்தினம் பூசாரி ரவி சாமி தலைமையில் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இது குறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஏற்றவாறு எங்களுக்கு சிறந்த பாதை அமைத்து, வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த பெற்றோரின் அடி சுவடுகளை பின்பற்றுவோம் என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!