
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஆர்எல்வி நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்ததால் தான் பணியாற்றிய ஓட்டல் அறையில், பொறியியல் பட்டதாரியான சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு: உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் பல ஆண்டுகளாக 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. உரிய விலையை எதிர்பார்த்த விவசாயிகள் 5 லட்சம் மூட்டைகளை இருப்பு வைத்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்: சதுரகிரி கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி நாளான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்ததால் மலையேறி சாமியை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சுந்தர மகாலிங்கத்தை வழிபட அனுமதியால் கூட்டம் கூடியது.
வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மாதாகோவில் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போடாததை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தக் கோரியும் அரசுப்பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை மறித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகளிடம் ஒரே நாளில் ரூ.11 லட்சம் பாக்கி வசூலிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 200- கடைகளில் இருந்து பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருப்பதால் திருக்கோயில் நிர்வாகம் பலமுறை வலியுறுத்தியும் வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை .
புதுச்சேரி: சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு காரணமாக, புதுச்சேரி எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தண்ணீர் தொட்டு செல்வதால், கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து பதிவாளரை மிரட்டிய பாஜகவினர் 12க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக நகர தலைவர் முருகையன், அரவிந்த் பாலாஜி, அவரது மனைவி புவனா, விஜயலட்சுமி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் படத்தை அகற்றுமாறும், பிரதமர் மோடி படத்தை வைக்குமாறும் பதிவாளர் தமிழ்ச்செல்விக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்தனர்.
சென்னை: கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தார். மீனம்பாக்கத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகிய ஆலம்பாக்கம் பாபு என்ற அறுப்பு பாபு (41) புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமநாதபுரம்: மண்டபம் அடுத்த வேதாளையில் இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வார்னிஷ் போன்ற ரசாயனக்கலவையை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம்: காணை அருகே தெளிமேடு பகுதியில் பணத்தை வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். எத்திராஜ் (45), கோபிகிருஷ்ணன் (31) ஆகிய இருவரையும் கைது செய்து ரூ.11,030 மற்றும் ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.