
கோவில் பொறுப்பிலிருந்து விலகி கொள்ள இந்து அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகத்தை மீண்டும் பரம்பரை டிரஸ்டுகளிடம் வழங்க இந்து சமய அறநிலை துறைக்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சனி பகவான் கோவில் உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் எங்கு வருகை தருவார்கள். இந்த கோவில் முன்பு பரம்பரை டிரஸ்ட் பராமரிப்பில் இருந்தது.
2003இல் இந்த கோயிலை ஹிந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது
இதை எதிர்த்து பரம்பரை டிரஸ்ட் நிர்வாகிகள் திருமலைமுத்து, தீபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது.
கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை பரம்பரை ட்ரெஸ்ட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது மதுரை கிளை நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.