
“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு”என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான இன்று (செப்டம்பர் 3) காலை 10 மணியளவில் தேவதானம் பெரிய கோவிலில் (அருள்மிகு தவம்பெற்ற நாயகி திருத்தலம்) தாய்த்தமிழில் வழிபாடு ராசபாளையம் வீரத்தமிழர் தொகுதி செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம்தமிழர் கட்சி ராசபாளைம் தொகுதித் தலைவர் பைசல்,தொகுதி செயலாளர் அய்யனார் ,துணை தலைவர் ராமராஜ், தகவல் தொழில் நுட்ப பாசறை இணை செயலாளர் புவனேஷ் பிரித்திவ்,தெற்கு நகர செயலாளர் மணிமாறன்,விருதுநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் பவளமணி மற்றும் கருப்பசாமி, பார்த்தசாரதி மற்றும் பலரும் பங்கேற்றனர்.
செய்திகைளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ராஜபாளைம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்:https://chat.whatsapp.com/HKr71Con9D4AleMFff5v4D
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.