தமிழகத்தின் அரசியல் வாரிசே… விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு – திமுக’வில் சலசலப்பு!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்ன ஸ்டாலின், அவரது மகனை அமைச்சராக்கலாமா என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

திரைப்படத்தை தவிர்த்து தமிழக அரசியல் இல்லை என்ற காலம் கடந்த 50 ஆண்டுகளாகவே அரங்கேறி வருகிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அரசியல் கட்சி இயக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து பல வருடங்களாக எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கு ஏற்றால்போல, நடிகர் விஜயின் பிறந்தநாள் மற்றும் அவரது திரைப்படம் வெளியாகும் போது அரசியல் சார்ந்த வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் விழாவிற்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள தனது ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியலுக்கு விரைவில் வருவார் என பல விவாதங்களை பலரும் எழுப்பி வரும் நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக, ‘எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே..’ என அனைவரையும் கவரும் வகையிலான வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி, திரைத்துறை வட்டாரம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும், அந்த போஸ்டரில் அரசியல் வாரிசுகளான ராகுல் காந்தி, ஸ்டாலின், துரை வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், வாரிசு அரசியில் ஏன பல்வேறு விவாதகங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் இந்தச் சூழலில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மேலும் பரபரப்பை அதிகப்படுத்தி வருகின்றது.

அரசியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் கவனத்தை ஈர்க்கும் வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்களை வடிவமைத்து ஒட்டுவதில் மதுரை வாசிகளின் தற்போதைய போஸ்டர் அனைத்து மக்களையும் கூடுதலாக யோசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் வாரிசு அரசியலை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!