
ஈழத்தமிழரை தேடி 40 ஆண்டுகளாக போராடும் தமிழக உறவு!
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஏற்றமோ அல்லது இறக்கமோ அவை தொடர்ந்து நீடிப்பதற்கோ அல்லது சரி செய்வதற்கோ, உரிய முடிவு எடுப்பதற்கு அல்லது தகுந்த ஆலோசனை வழங்குவதற்கு இவ்வுலகில் சிறந்த உறவாக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கிடைக்கக்கூடியது உறவு ஒன்றே ஒன்றுதான்! ஆம்!…அவர்கள் நம் நண்பர்களே!

நண்பர்கள் வட்டாரம் என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும், சிறந்த நண்பர்களாக அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இணைவது நமது பால்ய வயதில்தான். பிற்கால வாழ்க்கைப்போராட்டத்தில் அவர்களை நாம் தொலைத்திருக்கலாம். நீண்ட காலமாக அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் எண்கள் கிடைக்காமல் வருத்தப்படுவோர் நம்மில் பெரும்பாலானோர் உண்டு. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி பலவற்றை சாத்தியப்படுத்தி வரும் நிலையில், தன் நண்பன் நினைவுகளைச் சுமந்ததவாறு லண்டனில் உள்ள தன் நண்பனை தேடும் முயற்சியில் இறங்குகிறார் சக்திவேல் இன்றளவும் சுமார் 40 வருடங்களாக இளமை கால நண்பனை தேடும் அந்த இரு உறவுகளுக்கும் கரம் கொடுக்கும் முயற்சியில் களமிறங்குகிறது லெமூரியா நியூஸ் தமிழ்…

இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவர காரணமாக தமிழகத்தில் மதுரையில், பழங்காநத்தம் என்னும் இடத்தில் குடியமருகிறார் குவிண்டன் என்ற குயிண்டன் கிளாசஸ்.
பின்னர் இவரது பள்ளி படிப்பை தொடர்வதற்கு 1984 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஜெயராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியை தேர்வு செய்கின்றனர் பெற்றோர். இவர் அதே பள்ளியில் – விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படிக்கின்றார். அப்போது அதே பகுதியான, நாகமலை புதுக்கோட்டையில் வசித்து வந்து, விடுதியில் தங்கி படிக்கும் சக்தி என்ற சக்திவேல் எனும் மாணவனுக்கும் நட்பு மலர ஆரம்பிக்கிறது.

இருவரும் 8,9,10 என மூன்று வருட படிப்பு முடிப்பதற்குள் இருவருக்கும் ஆழமான, வானமே எல்லையாய் மலர்ந்த இவர்களின் நட்பில் பிளவை ஏற்படுத்தியது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு. பத்தாம் வகுப்பு தேர்வு முடித்த சக்திவேல் ஐ.டி.ஐ படிப்பதற்காக வேறு இடத்திற்கும், குயின்டன் கிளாஸ் இலங்கைக்கும் சென்று விடுகிறார். சில வருடங்கள் கழித்து இந்தியா வரும் குவிண்டன் தன் நண்பன் சக்திவேலை , அவர் ஊரான நாகமலைப் புதுக்கோட்டை உள்ளிட்ட மதுரையில் பல இடங்கள் சென்று , தன் நண்பர்கள் மூலம் பலரிடமும் விசாரிக்கிறார் நண்பனை பார்க்க முடியவில்லை என்று மனம் வெதும்புகிறார்.
இந்த நிலையில் குவிண்டன் தன் மாமா வசிக்கும் லண்டன் பகுதிக்கு சென்று விட்டதாக சில நண்பர்கள் சில காலம் கழித்து கூறுகின்றனர். அதுவரை பழங் காநத்தம், நாகமலை புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் புகைப்படத்துடன் தேடி வந்துள்ளார் சக்திவேல். தமிழகத்தில் தன் நண்பன் இல்லை என்ற செய்தி அவரது இதயத்தை இன்னமும் ரணமாக்குகிறது .
தன் நண்பன் நினைவுகளைச் சுமந்ததவாறு லண்டனில் உள்ள தன் நண்பனை தேடும் முயற்சியில் இறங்குகிறார் சக்திவேல் இன்றளவும் சுமார் 40 வருடங்களாக இளமை கால நண்பனை தேடும் அந்த இரு உறவுகளுக்கும் கரம் கொடுக்கும் முயற்சியில் களமிறங்குகிறது லெமூரியா நியூஸ் தமிழ் ஊடகம்…!!

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பை போல் நட்பின் இலக்கணமாய் திகழும் இந்த இருவரும் இருவரின் நட்பு இணைவதில் தாங்களும் பங்கு கொண்டு லண்டன் அல்லது வேறு ஐரோப்பிய நாட்டில் அல்லது எந்த நாட்டில் இருந்தாலும் அவரை இந்த செய்தியை காணும் படி செய்து லெமுரியா நியூஸ் தமிழ் ஊடகத்தின் வாயிலாக தொடர்பு கொள்ள செய்து இந்த இருவரின் நட்புக்கும் பாலமாய் அமைந்திட உதவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை உலகத்தமிழர்களின் பார்வைக்கு வெளியிடுகிறோம்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தற்போது மலேசியாவில் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் தகவல் அறிய/தெரிவிக்க Lemooriyanews@gmail.com-க்கு மின்னஞ்சல் செய்யவும்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.