Prapakaran Alive: இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி – பிரபாகரன் பேசிய ஆடியோ வைரல்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கும் கருத்து, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவலுக்கு பல தலைவர்கள் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் பிரபாகரனின் புதிய புகைப்படம் கிடைக்கப்பெற்று, பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் விவதத்துக்கு இடையே தற்போது அந்த படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் முகப்பு படமாக வைத்தும் வருகின்றனர். இந்நிலையில் தேசியத் தலைவரால் புலம்பெயர் மக்களுக்கு பிரத்தியேகமாக கூறப்பட்ட செய்தி காணொளியாக உள்ளது.

Also Read: இலங்கையில் அண்ணாமலை… விடுதலைப்புலிகளை களங்கப்படுத்தும் நோக்கம்…

எந்தப் புலனாய்வு சக்திகளும் ஏமாற்ற முடியாதவாறு பல செய்திகள் உள்ளது. அதில் சிறு பகுதி.மீதி காணொளியாக விரைவில் என பதிவிட்டு பிரபாகரன் அவர்கள் பேசிய குரல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!