மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை (பிப்.18) இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவற்ற தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும்.
பின்னா், நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 3 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறுகின்றன.இத்திருக்கோயிலுடன் இணைநத அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் நள்ளிரவு நான்கு காலபூஜை நடைபெறுகிறது என திருச்செந்தூா் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.