🛑 LIVE: திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நேரலை

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனின் இரண்டாவது படை வீடானதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை வெகுவிமரிசையாக நடைபெற உள்ள நிலையில் 5,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த திருவிழாவை முன்னிட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இயங்கும் மேற்படி காவல்துறை ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு ஏதேனும் அசாம்பாவிதம் நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று குற்றச் சம்பவங்களை தடுக்கவும், சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களை நேரடியாக கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலமும் அனைத்து இடங்களையும் கண்காணித்தும் பக்தர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!