தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமாவினரிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி(67). நடிகர் விசுவால் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் நடித்த முதல் படம் பூந்தோட்டம் திரைப்படமாகும்.

தமிழ் சினிமாவில் இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்து சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விவேக், வடிவேலு நகைச்சுவைகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமாவினரிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி. இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பொன்னவராயன் கோட்டையில் மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

One thought on “தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.

Leave a Reply

error: Content is protected !!