மதுரை திருமங்கலம் அருகே மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் பலி (CCTV காட்சி)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி – காஷ்மீர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் பகுதியில் இருந்து தனக்கன்குளம் பகுதியிலுள்ள நிலையூர் கண்மாயில் கட்டப்பட்டுவரும் தனியார் கட்டிட பணிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி கூத்தியார்குண்டு அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்லக்கூடிய இணைப்பு சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது டிப்பர் லாரி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் உட்பட லாரி டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடந்து மூணாண்டிபட்டியைச் சேர்ந்த தோப்பூர் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் கோபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட இப்பகுதியில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு வாகனங்கள் உதவியுடன் கவிழ்ந்த டிப்பர் லாரியை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்துகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் இப்பகுதியினருடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண் ஏற்றி வந்த லாரி – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!