
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற செய்தி குறித்த தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த செய்தி தற்போது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டம் தமிழின தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் இன தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என தெரிவித்துக் கொள்கின்றேன்.தஞ்சையில் இன்று (பிப்.13) காலை செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மனைவி மற்றும் மகளுடன் நலமுடன் இருக்கிறார். அவருடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
அவர்களுடைய அனுமதியுடன்தான் நான் இத்தகவலைத் தெரிவிக்கிறேன்.இவ்வளவு காலம் கழித்து பிரபாகரன் பற்றி இப்போது சொல்ல வேண்டிய நிலை ஏன் வந்தது என்றால், அதற்கான சூழல் தற்போது இலங்கையில் கனிந்துள்ளது. ராஜபக்ச குடும்ப ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளது. அதனால் இத்தகவலை வெளியிடுகிறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தரும். விரைவில் பிரபாகரன் தமிழீழம் தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிடுவார். ஆனால் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க முடியாது. பிரபாகரன் மக்கள் முன் தோன்றும்போது தமிழக அரசு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் உலகத் தமிழர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்
தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.