சூப்பர் அப்டேட்: திருமண உதவித்தொகை இனி 50 ஆயிரம்! பந்தி முதல் சீர்வரிசை பாத்திரங்கள் வரை அரசே ஏற்கும்!


கடந்த ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
கடந்த ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
மேலும் திருமணம் மண்டபத்தில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ50000 ரொக்க பணமும் வழங்கப்படும். அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ 25,000 ரொக்கமும் வழங்கப்படுகின்றது. குறிப்பாக மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அவை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுதப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டு கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவி தொகை இலவச 20,000 இல் இருந்து ரூ 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம்,பீரோ,மெத்தை,கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்படும். இச்செலவினை இந்துசமய அறநிலையத் துறையே ஏற்கும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!