மதுரை திருப்பரங்குன்றம் அருகே பசுவின் தீவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அடுத்த கூத்தியார்குண்டு வை சேர்ந்தவர் செல்லி (எ) ஆறுமுகம், விவசாயி; இவரது, வைக்கோல் போர் இன்று காலை 11 மணிக்கு தீப்பிடித்து எரிந்து காற்றில் மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்ததில் வைக்கோல் போர் நாசமானது. தகவலறிந்து, வந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி, அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.