
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலையில் திடீரென பணிகளை விட்டு மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவமனை அரசு பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் எங்களை யாரும் மதிக்காமல் அடிமையை போல் அரசு பணியாளர்கள் செய்யவேண்டிய அனைத்து பணிகளையும் நாங்களே செய்கின்றோம். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களை 8 மணி நேர வேலைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய சொல்வதுடன், அரசு பணியாளர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் எங்களை மட்டும் உணவு இடைவெளி சிறிதுகூட ஓய்வுஇல்லாமல் பணியாற்ற வேண்டும் என மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர்.
இதனால் ஒப்பந்த பணியாளரான நாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொரானா காலத்தில் உயிரை பனையம் வைத்து பணி செய்த எங்களுக்கு அரசு வழங்கிய 15 ஆயிரம் ரூபாய் இன்று வரை பெரியகுளம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு இந்த மருத்துவமனையில் பணி பாதுகாப்பு ஏதும் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர்களை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை ஒப்பந்த பணியாளர்களின் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.