மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர் மூத்த மகனுக்கு வேலை.வழங்க வேண்டும் அரவிந்தராஜ் தாயார் கோரிக்கைஎனது தாயாரை கவனித்துக் கொள்ளவும் எனது வாழ்வாதாரத்திற்கும் அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் அரவிந்தராஜ் சகோதரர்.
கண்ணீர் பேட்டிமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜின் குடும்பத்தினரை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், எம்எல்ஏ வெங்கடேசன், ஆகியோர் இணைந்து முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சத்திற்கான காசோலையும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரொக்கப்பணம் மொத்தம் 5 லட்சம் ரூபாயை உயிரிழந்த அரவிந்தராஜின் தாயாரிடம் வழங்கினர்.
மேலும் அரவிந்தராஜின் தாயார் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தன்னுடைய மூத்த மகனுக்கு ( நரேந்திரன்) அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அரவிந்தன் தாயார் கூறும்போது என் மகனை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் மீதி இருக்கும் ஒரு மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்அரவிந்தராஜ் சகோதரன் நரேந்திரன் கூறும் போது எனக்கு இருந்த ஒரு தம்பியை இழந்து விட்டேன் எனது தாயாரை கவனித்துக் கொள்ள என்னை விட்டால் வேறு உறவுகள் இல்லை எனக்கும் சரியான வேலை இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறேன் ஆகையால் எனது தாயாரை கவனித்துக் கொள்ளவும் எனது வாழ்வாதாரத்திற்கும் அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என்று எண்ணி மகிழ கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.