
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், இன்று அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கரன்கோவிலில் இருந்து மாட்டுத்தாவணி நோக்கி வந்த லாரியும் , பரவையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த காய்கறிகள் ஏற்றிக்கொண்ட சரக்கு லாரியும் கப்பலூர் அருகே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் , சங்கரன்கோவிலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணன்(49) உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார் .
மற்றொரு லாரியில் வந்த ஓட்டுநர் (வேல்பாண்டி) மற்றும் கிளீனர் (ஆரோக்கியா)ஆகிய இருவர் படுகாயம் அடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.