
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் உள்ளது. சுமார் 742 ஏக்கர் பரப்பளவும். 27 அடி ஆழமும், 1712 ஏக்கர் பாசன வசதியும் கொண்டதாகும்.
25-க்கும் மேற்பட்ட கிராம மக்க ளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மன்னர் காலத்து கண்மாயான இந்த கண்மாயில் 3 மடைகள் உள்ளது. கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நடுமடையின் வழியே கருவேலம்பட்டி, சொக்கநாதன்பட்டி, சம்பக்குளம், மொச்சிக்குளம், ஒத்த ஆலங்குளம் உள்ளிட்ட 70 கண்மாய்களுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 20 கண் மாய்களுக்கும் வைகை தண்ணீர் செல்லும். நிலையூர் கண் மாய் நடுமடை பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு 25 மீட்டர் அகலம் கொண்ட கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு 5 மீட்டர் அகலமாக சுருங்கியதால் தண்ணீர் ஒரே சீராக செல்லாத நிலை இருந்தது.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகரிடமும் மனு கொடுத்தனர்.இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று தாசில்தார் பார்த்திபன் நேரடி மேற்பார்வையில் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, பணி ஆய்வாளர்கள் வரதமுனிஸ்வரன், கென்னடி மற்றும் ஊழியர்கள் ஆக்கிர மிப்பை அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆஸ்டின்பட்டி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சுமார் 100 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கால்வாய் அகலப்படுத்தப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.