
மகனின் நினைவு நாளை முன்னிட்டு வி.ஏ.ஓ செய்த நெகழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுகள்.!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டிய கிராம நிர்வாக அலுவலர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சேது.கந்தவேல் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஆதி கந்தவேல் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். தனது மகனின் நினைவை போற்றும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறார். மேலும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு தேவையான தேவைகளை அறிந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக அவரது மகனின் நினைவு நாளான இன்று மதுரை விநாயகர் நகர் தங்கராசன் சாலையில் உள்ள நா.ம.ரா.சுப்புராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் பயின்று வரும் ஆதரவற்ற மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் உணவு வழங்கி தனது மகனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தான் ஒரு அரசு பணியாளராக இருந்தும் கூட பொதுமக்கள் மாணவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் என அனைவரின் தேவைகளை அறிந்து உதவிக்கரம் நீட்டி வரும் கிராம நிர்வாக அலுவலரான சேது. கந்தவேல் அவர்களின் செயல் பலரையும் நெழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.