திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழா… 3மணி நேரம் காத்திருந்து இன்ஸ்டா பிரபலம் தரிசனம்.!

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழா… 3மணி நேரம் காத்திருந்து இன்ஸ்டா பிரபலம் தரிசனம்.!

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 14.07.2025 திங்கள் கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் திருஉருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும்.

2 கோடியே 44 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை 10 ஆம் தேதி யாக சாலை பூஜைகள்  நடைபெற்றது.
அதிகாலை 5.25 மணியிலிருந்து காலை 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 125 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களில் புனித நீர்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, இராஜகோபுரரத்தை தொடர்ந்து ,
வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை, பசுபதீஸ்வரர் ஆகிய மூன்று விமானங்களுக்கு புனித நீர்கள் ஊற்றப்பட்டன.

திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா எனும் விண்ணை பிளக்கும் பக்த கோசங்களின் மத்தியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளினார்கள், 75 யாக குண்டங்களில் ஜுலை 10 ஆம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று அதிகாலை வரை எட்டு காலங்களாக நடைபெற்றது, யாக சாலைகளில் வைத்து வழிபாடு நடத்திய புனித நீர்கள் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஊரின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள், திருப்புகழ் முற்றோதுதல், பன்னிரு திருமுறை தமிழ் வேத பாராயணம், தவில், நாதஸ்வர இசை ஒலிபரப்பப்பட்டது.  ராஜகோபுரம், கோயிலின் முன் பகுதி 16 கால் மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக 27 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டது, திருக்கோவில் மேற்புறத்தில் 1,700 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,
மதுரை மாநகர காவல்துறை சார்பில் 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்க் கொண்டனர்.  திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக உணவுகள் வழங்கப்பட்டது.

பின்பு, மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் மீது 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என பலரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பல மணி நேரம் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்  சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூ-டியூப்களில்  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி குமார்  என்ற பெண் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

அவர் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக கையில் பஞ்சாமிர்த டப்பாவுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை அவரது வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!