திருப்பரங்குன்றம் மலைக்கோவிலில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி: CRPF பாதுகாப்புடன் காலை முதலே குவியும் பக்தர்கள்!

திருப்பரங்குன்றம் மலைக்கோவிலில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி: CRPF பாதுகாப்புடன் காலை முதலே குவியும் பக்தர்கள்!

உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதிக்கு பொதுமக்கள் தீபம் ஏற்ற அனுமதி – காலை முதலே குவியும் பக்தர்கள்; பிற்பகல் 1 மணி வரை 700க்கும் மேற்பட்டோர் மலைக்கு செல்ல அனுமதி- ஆதார் உள்ளிட்ட விபரங்களின் சரிபார்ப்புக்கு பிறகு மலைப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, நேற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்கள் நேரில் சென்று தீபம் ஏற்றலாம் என ஓய்வுபெற்ற நீதியரசர்கள் உத்தரவு வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று முதல் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பொதுமக்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர்களும் திருக்கோவில் பொறுப்பாளர்களுமான பார்த்திபன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலே பழனியாண்டவர் கோவில் வழியாக மலைக்குச் செல்லும் பக்தர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.

மலைப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மலைக்குச் செல்லும் பக்தர்களின் பெயர் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1மணி நிலவரப்படி சுமார் மலை மேல் இருக்கக்கூடிய சிக்கந்தர் தர்காவிற்கு 108 இஸ்லாமியர்கள் மற்றும் உச்சி பிள்ளையார் கோவில் பகுதிக்கு 633 – நபர்கள் என மொத்தம் தற்போது வரை 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்களும் தீபம் ஏற்றலாம் என்ற அறிவிப்பு வெளியானதால், காலை முதலே திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!