
கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வேண்டுதலாக வைத்து அவர் ஐயப்பனை நாடி வந்ததாக கூறியுள்ளார். இது குறித்து மூதாட்டி பருகுட்டியம்மா கூறுகையில் சபரிமலை ஐயப்பனை காண தனக்கு பலர் உதவியதாகவும் 18 படிகளையும் ஐயப்பனின் இருப்பிடத்தையும் பார்த்து தான் திருத்தி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மூதாட்டியின் பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது மனைவி ராக்கி இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.