
புல்மேடு பாதை வழியாக சபரிபுல்மேடு பாதை வழியாக சபரி யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..
புல்மேடு பாதை வழியாக சபரிமலைக்கு யாத்திரை செல்கிறீர்களா! அப்போ இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க.
புல்மேடு பாதை வழியாக சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள்… இந்த பாதை வண்டி பெரியாரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சத்திரம் என்ற இடத்தில் இருந்து நடை பயணம் தொடங்குகிறது.இந்த பாதை கார்த்திகை மாதம் 1 ம் தேதியில் இருந்து மகரஜோதி முடியும் வரை மட்டுமே சபரியாத்திரை செல்ல அனுமதி. இங்கு இருந்து சபரிமலை சன்னிதானம் 12 கிலோ மீட்டர், முதலில் கேரளா காவல்துறை மற்றும் வனத்துறையால் நம்மையும் நம்முடைய உடமைகளையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள் சிறிய பிளாஸ்டிக் பைகள் சோப்பு, டூட் பேஸ்ட், வலி நிவரண தையலம்,தண்ணீர் பாட்டில்(பிளாஸ்டிக்) என்று எதையும் அனுமதிப்பதில்லை. காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடை பயணம் தொடங்க அனுமதி தருகிறார்கள். முதல் 1.5 கிலோ மீட்டர் கடுமையான மலையேற்றம் ஏற வேண்டும் பின்பு அடுத்த 4.5 கிலோ மீட்டர் சமதளமான இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளி பயணம் வாய்ப்பு இருந்தால் யானைகள் கூட்டமாக உலாவும் காட்சிகளையும் கண்டு களிக்களாம், பிறகு 6 வது கி.மீ புல்மேடு பகுதியை அடையலாம் வழியில் இரண்டு இடங்களில் வனத்துறை மூலம் தண்ணீர் கொடுக்கிறார்கள். புல்மேடு பகுதியில் மருத்துவ முகாம் மற்றும் வனத்துறையால் அமைக்கப்பட்ட உணவகம் உள்ளது இங்கு கப்ப கஞ்சி கிடைக்கிறது ரூ.45/- மட்டுமே.
புல்மேடு பகுதியில் இருந்து சன்னி தானம் 6 கி.மீ தூரம் இந்த பாதையில் கடினமான இறக்கத்தை கடந்தால் சன்னிதானம் அடையலாம் வழியில் இரண்டு பகுதியில் வனத்துறை மூலமாக தண்ணீர் கொடுக்கிறார்கள்.
இந்த பாதையில் எந்த ஒரு கடையும் கிடையாது நமக்கான உணவுகளை நாம் எடுத்து செல்வது நல்லது. பொதுவாக இந்த புல்மேடு பாதை மிகவும் சுலபம் என்று பலர் கூறுகிறார்கள் உண்மை என்னவெனில் முறையாக மாலை அணிந்து விரதம் முறைகளில் இருக்கும் கடுமையான பழக்க வழக்கங்களை கடை பிடித்தால் மட்டுமே சற்றே சுலபமாக இருக்கும் என்பது என்னுடைய பயணத்தில் நான் கற்றுக்கொண்ட அனுபவம்.
மற்றும் இந்த பாதையை உடல் நல பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. அவசர மருத்துவ சேவைக்கு பம்பையில் இருப்பது போன்ற வசதிகள் இந்த பாதையில் கிடையாது.
முக்கியமான விஷயம் இந்த பாதையில் அட்டை பூச்சிகள் மிக மிக அதிகம் எனவே பயணம் தொடங்கும் சத்திரம் என்ற இடத்தில் கடைகளில் இதற்கான மருந்து கிடைக்கிறது மறக்காமல் தவறாமல் வாங்கி கால்களில் தடவி கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.