மன்னிப்புக் கடிதம் கொடுத்த சவார்க்கர்! சுதந்திரப் போராட்ட வீரரா.? பித்தலாட்டமும் பொய்யும்-உண்மை வரலாறு என்ன?

தேச துரோகியை, சுதந்திரப் போராட்ட வீரராக காட்ட முயற்சி.

சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர(?!) வரலாறு:

விடுதலை அளித்தால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவேன் என்றவன் சவார்க்கர்.

வரலாறுகளை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வது அவசியம்…

இல்லை எனில்

உங்களுக்கு எதிராக வரலாறு திரும்பும் அளவுக்கு வரலாற்றை, தேச துரோகிகளுக்கு பாரதா ரத்னா கொடுத்து கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றி விடுவார்கள்.

சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அது மட்டுமல்ல,

பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர் என்பது தான் வரலாறு…

சாவர்க்கர் 1911, 1913, 1914 ஆகிய ஆண்டுகளில் தனது மூன்று மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதி அனுப்பிவிட்டார்.

சாவர்க்கர் குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்,

கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தை எதிர்கொண்டார் சாவர்கர்.

1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார்.

அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். “

மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்தமான் சிறைச்சாலை பதிவுகள் காட்டுகின்றன. மரணதண்டனை வழங்கப்பட்ட இடம், சாவர்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது.

இதுவும் சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் கொடுக்கும் அளவுக்கு பாதித்திருக்கலாம்.

சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கி விடுவார்கள்.
சாவர்க்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. “

“தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.”

“பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைமையில் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கியுள்ளதாகவும், இப்போது வன்முறையின் பாதையை விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார்.

இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது

சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கோருவதை நியாயப்படுத்தியிருந்தனர். இது தங்களுடைய தந்திர திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இதன் காரணமாக சில சலுகைகளைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தனர்.

சாவர்க்கர் தனது சுயசரிதையில், “நான் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம் இருந்து பறித்திருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

“காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு அவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்” என்று நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்.

“ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன.

அதேபோல்,

இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிரஞ்சன்.

இது இன்றைய அரசியலின் யதார்த்தத்தை காட்டுவதாகவே இருக்கிறது.

நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும்.

அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்” என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் நிரஞ்சன் தக்லே…

கடந்த 2019 ம் வருடம் அன்று பேசிய ராஜ்நாத்சிங் ,

மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படிதான் அவர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார்” என பாஜக அரசின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்,

“சாவர்க்கர் செல்லுலார் சிறையில் இருந்தபோது, மகாத்மா காந்தி வர்தா சிறையில் இருந்தார். அந்தச் சமயத்தில் சாவர்க்கரை, காந்தி எப்படித் தொடர்புகொண்டார்?” எனக் கேள்வி எழுப்பியவர்,

“பாஜக-வினர் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.

1911-ம் ஆண்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் மொத்தம் ஆறு மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார் என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.

வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி.நூரணி,

1920-ம் ஆண்டு, சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் அவர்கள்
கூறியதாக,

“மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து 1914-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி புறப்பட்டு 1915-ம் ஆண்டு, ஜனவரி 9-ம் தேதியே இந்தியாவுக்கு வருகை தந்தார்.

அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இரு முறை கருணை மனுக்களை எழுதியிருக்கிறார்”

சாவர்க்கர் மன்னிப்பு கடிதத்தில் “சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்குச் சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்!” என்று கூட கூறியுள்ளார்..

சாவர்க்கர் தனது ஐந்தாவது கடிதத்தில் தன் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சாவர்க்கர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்துக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாகவே, சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 1921, மே மாதம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும், 1924-ம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ஆறாவது கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், `எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’ போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில்,

1924, ஜனவரி 6-ம் தேதி சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!