ஒரு தலை காதலால் நேர்ந்த கொடுமை.. அரசுப்பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை குத்திக்கொலை..!

ஒரு தலை காதலால் நேர்ந்த கொடுமை.. அரசுப்பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை குத்திக்கொலை..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி(23). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகக் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) என்பவர் ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது பெற்றோரிடம் கூறி பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ரமணி வீட்டுக்கு சில நாள்களுக்கு முன் பெண் கேட்டுச்சென்ற மதனின் பெற்றோரிடம், ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என ரமணியின் பெற்றோர் கூறியுள்ளனர்…

இதனால் மதன், இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்து அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதில் ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரமணியை குத்தி கொலை செய்யப்பட்ட மதன் என்பவரை காவல் துறை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!