திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு: விவசாய இலவச மின்சார இணைப்பை துண்டித்ததால் விவசாயிகள் அவதி.!

திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு: விவசாய இலவச மின்சார இணைப்பை துண்டித்ததால் விவசாயிகள் அவதி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் 2வது பிட் கருவேலம்பட்டி கிராமத்தில் மின்சார பகிர்வில் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் அதற்காக கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் செய்வதற்கு பதிலாத அப்பகுதியில் தட்கல் பதிவு மூலம் வழங்கப்பட்ட விவசாய இலவச மின்சார இணைப்பை மர்மநபர்கள் துண்டித்ததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறிவருகின்றனர்.

கருவேலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூத்தியார்குண்டு, நிலையூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி திடீரென விவசாய நிலத்திற்கு வரக்கூடிய விவசாய இலவச மின் இணைப்பை துண்டித்ததால் 170 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் விளையும் வாழை மற்றும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மின்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!