திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களுக்கு தினம் காலை அன்னதானம் வழங்கும் நிகழ்வு நேற்று துவங்கியது.

சங்க மாநில தலைவர் வில்வநாதன் குத்து விளக்கேற்றினார். கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன் துவக்கி வைத்தனர். அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மதேவன், சண்முக சுந்தரம், ராமையா, சங்க நிர்வாகிகள் குருசாமி, பாலமுருகன் மனோகரன் சுப்பையா கலந்து கொண்டனர்.

மகர ம வரை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு காலை அன்னதானம் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். -போட்டோ கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!