
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு… பிரமாண்ட கோலப்போட்டி!

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் மற்றும் மண்டல தலைவர் சுவிதாவிமல் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. மெகா கோலப்போட்டியில்
முதல் பரிசாக 1/2 பவுண் தோடும்.
2வது பரிசாக கால் பவுண் தோடும்,
3வது பரிசாக 12 ஆயிரம் மதிப்புள்ள கிரைண்டர்.
4வது பரிசாக 10 ஆயிரம் மதிப்புள்ள மிக்ஸியும்
போட்டியில் பங்கு பெற்ற ஆயிரம் பேருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகிறது. திருப்பங்குன்றம் கிரிவலப்பாதை படிக்கட்டு முதல் காலை 7 மணி முதலே பெண்கள் குவியத் தொடங்கி தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதியில் கோலங்களை வரைந்து வண்ணங்களில் அலங்கரித்தனர். கலைஞர் கருணாநிதி துணை முதல்வர் உதயநிதியை வாழ்த்துவது போல்,தமிழர் பெருமை பேசும் எருதுகள் , கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என மூவரையும் வண்ணத்தில் வரைந்து பார்ப்பவரை எண்ணத்தில் ஆச்சரியப்பட வைத்த பெண்கள், கலைநயமிக்க கோலங்களைதங்கள் கைவண்ணங்களில்வரைந்துகோலப் போட்டி நடுவர்களையே திகைக்க வைத்தனர். கோலப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு நாளை மாலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பரிசுகளை வழங்குகிறார். தாரிணி என்பவர் குறிப்பிடுகையில் துணை முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெறுகிறது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் கம்பி கோலம் புள்ளி கோலம் ரங்கோலி மற்றும் ஓவியம் ஆகியவை வரையப்பட்டது. திருப்பரங்குன்றம் ஸ்வேதா கூறிப்பிடுகையில் துணை முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பார்ப்பகுதியில் கோலப்போட்டி நடைபெறுகிறது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகிறோம் பல்வேறு வகையில் கோலம் போட்டுள்ளனர் போட்டியில் பங்கு பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.