திருப்பரங்குன்றத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!

திருப்பரங்குன்றத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!

தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இன்று தனது 70வது அகவையை எட்டியுள்ள நிலையில், அவரை உலகத் தமிழினம் இன்று கொண்டாடி மகிழ்கிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வலையங்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு நடமாடும் இரத்த வங்கி சேவை வாகனத்தில் இரத்ததான முகாமும் சமுதாய கூடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்டத் தலைவர் செயலாளர் மருதமுத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண்ஜெயசீலன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தெற்கு மண்டல செயலாளர் டேவிட் ராஜன் தலைமை தாங்கினார்.

குருதிக் கொடை பாசறை செயலாளர் நவீன்குமார், மாவட்டச் செயலாளர் அசோக் குமார், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், தொகுதி செயலாளர் பணமரத்தான் பாண்டி, வலையங்குளம் ஒன்றிய செயலாளர் அழகேசன், வலையங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இரத்ததான முகாமில் 50-ற்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் மணி முனீஸ்வரன் நன்றி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!