ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாதக சார்பில் மூன்று முறை வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. இன்று (17/01/2025) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று மதியம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் மனீஷியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் எக்காரணத்திற்காகவும் வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என்பதற்காக தலைமையின் உத்தரவின் பேரில் மா.கி.சீதாலட்சுமி சார்பில் மூன்று முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், மாற்று வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா என்பவரும் வேட்புமனு கொடுத்துள்ளாராம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.