அதிசயம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் வானில் தோன்றிய பிள்ளையார்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி ஆகும். சந்திரனின் அகந்தையை அழித்து அருளாசி வழங்கிய நாள்.செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அங்காரக சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.

இறை வழிபாட்டில் முதலில் செய்ய வேண்டியது விநாயகப் பெருமான் வழிபாடு. அதிலும் சங்கடகர சதுர்த்தி அன்று கணபதியை வழிபடுவது சிறப்பானது.

சங்கடகர சதுர்த்தி அன்று நாம் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டால் நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விக்கினங்களைத் தீர்ப்பவர் விநாயகர். அதாவது சங்கடங்களைத் தீர்ப்பவர் என்று அர்த்தம். நாம் எந்த செயலை தொடங்குவதற்கு முன் அல்லது நினைத்த காரியம் சிறப்பாக நிறைவேற விநாயகர் வழிபாடு மிகவும் அவசியமாகும்.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி ஆகும்.

இந்த நன்னாளில் விநாயகரை நினைத்து வழிபடுவதால் தொழிலில் தோல்வி, சங்கடங்கள், தடைகள் அழிப்பதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். மனிதர்கள் மட்டுமல்லாமல் இந்த நன்னாளில் தெய்வங்களும், தேவர்களும் கூட இந்த விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதால் அவர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு வேண்டியதை வழங்குபவர். அவர்களின் இன்னல்களை நீக்குவார் கணபதி என பக்தர்கள் தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று பல்வேறு விநாயகர் கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில் இன்று திடீரென தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரம் பகுதியானது முழுவதும் செக்க சிவந்த செம்மண் தேரி பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் மாலை வேளையில் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென வானத்தில் விநாயகர் போன்ற மேகம் ஒன்று தென்படுவதாக கூறி அதனை நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும் அந்த வானம் ஆனது பார்ப்பதற்கு விநாயகர் போன்ற தோற்றத்தில் இருந்ததாகவும் கூறி வாகனங்களை நிறுத்தி அதனை பார்த்து பரவசமடைந்தனர். இந்த விநாயகர் போன்ற தோற்றத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியதால் தற்போது அது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!