கோழி கூவுமுன் விடியல்
வேலைகள் செய்ய பட்டியல்
அதிகாலை விழிப்புடன் கரையல்
கோலம் போடும் வளையல்
புத்துணர்ச்சி வேண்டி குளியவ்
பக்தியில் தெய்வம் தொழல்
ருசியான உணவு சமையல்
பசி தீர்க்கும் படையல்
உறவுகள் சிறந்த விருந்தோம்பல்
குழந்தைகளை பள்ளி அனுப்பல்
கணவர் செல்லும் அலுவல்
அழுக்கு போக துவைத்தல்
வீட்டை கூட்டி பெருக்கல்
வீட்டு பாடம் முடித்தல்
சிறிது நேரம் களைத்தல்
வரவு செலவு பார்த்தல்
மளிகை காய்கறி வாங்குதல்
தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்தல்
காலையிருந்து இரவுவரை தொடர்தல்
பெண் தெய்வம் என்றால்
படைத்தல் காத்தல் அழித்தல்
வீட்டுக்குள் தலைவி வந்தால்
எல்லா வேலையும் முடித்தல்
நல்லவை செய்ய பாராட்டல்
தவறு இருந்தால் கடித்தல்
கடைசியாக படுக்கை துயில்
குடும்ப முன்னேற்ற உயர்தல்
குடும்ப தலைவிக்கு ஈடுயில்லை
செய்யும் வேலைகளுக்கு அளவில்லை
இரண்டு கைகள் பத்தவில்லை
பாராட்ட வார்த்தையில்லை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.