மதுரையில் பரபரப்பு: தீபாவளி வியாபார கூட்டத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் கடைவீதிகளில் தங்களுக்கு பிடித்தமான ஆடை மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பரபரப்பு மிகுந்த மதுரை நேதாஜி மெயின் ரோட்டில் திடீரென நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளதை கண்ட அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து தீபாவளி பொருட்கள் வாங்க வந்த சிவபாண்டியன் என்பவர் தன்னிடமிருந்த சாக்கு பையைக் கொண்டு சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பை லாபகமாக பிடித்து பையில் அடைத்து எடுத்துச் சென்றார்.

தொடர்ந்து மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பாம்பு வந்ததை கண்ட பொதுமக்கள் அலறி அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!