
மதுரை எய்ம்ஸ் அருகே அடுத்தடுத்த கொலைகள்… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 23 ) இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இஸ்மாயிலை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இஸ்மாயில் நண்பர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை.
நண்பர்களுக்கு கஞ்சா வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட இஸ்மாயில் கஞ்சா தராமல் இழுத்து அடித்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் இஸ்மாயிலை ஆஸ்டின்பட்டி பகுதிக்கு டூவீலரில் கூட்டிச் சென்று கஞ்சா விற்பனை தொடர்பாக கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர்.
அப்போது இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று இரவு இஸ்மாயிலை தாக்கி உள்ளனர்.
இதில் நிலைத்தடுமாறி விழுந்த இஸ்மாயில் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இறந்த இஸ்மாயில் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் ஆஸ்டின்பட்டி – தோப்பூர் அரசு மருத்துவமனை அருகே வட மாநிலத் தொழிலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் தொடர்பாக வாலிபர் கொலை செய்யப்பட்டது தோப்பூர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எய்ம்ஸ் இணைப்புச்சாலையான கூத்தியார்குண்டு முதல் கரடிக்கல் வரை மின்விளக்குகள் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை சமூக விரோதிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மேலும் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். தொடர்ந்து இரு நாட்கள் அடுத்தடுத்து கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இசசம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் மதுரை வி. காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.