தொடர்ந்து படங்களில் நடிக்க சுரேஷ் கோபி முடிவு

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக-வை காலூன்ற வைத்துள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சூருக்கு நேற்று சென்ற சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் நடிக்க ஒப்பந்தமான படங்களை முதலில் முடித்து கொடுக்க இருக்கிறேன். மம்மூட்டி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன். அடுத்து கோகுலம் கோபாலன் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க இருக்கிறேன். அதில் ஒன்று ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘பான்- யுனிவர்ஸ்’ படம். ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எப்படி படங்களில் நடித்து வந்தேனோ, அப்படியே இப்போதும் நடிக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!