நான் இந்து அல்ல… ஆளுநரின் அடிமை யார்? ‘திமுக’விற்கு சரமாரி கேள்வி!

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 220-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்:

யார் வீரர்:

8 நாட்கள் சண்டை போட்ட சிவாஜி வீரசிவாஜி என்று வரலாறு திரிக்கப்பட்டு வருகிறது.ஆனால் உண்மையிலேயே வெள்ளைக்காரர்களை எதிர்த்து 8 மாதங்கள் சண்டையிட்ட மருதுபாண்டியர்களே உண்மையான வீரர்கள் என தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், எங்கள் பாட்டன் எங்களுக்கு கற்பித்தது ஒன்று தான் “ஒரே இரத்தம்! அதே வீரம்” என தெரிவித்தார்.

நாங்கள் இந்துக்கள் அல்ல:

தமிழர்கள் இந்து மதத்தை விரும்பி ஏற்றது அல்ல.. வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட மதமே இந்து மதம்
நான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் மதம் மாறி வாங்க என அழைக்கவே இல்லை.. மதம் மாறுவதும் மாறாமல் போவதும் உங்கள் விருப்பம். உங்களை மதம் மாற சொல்ல நான் நபிகள் நாயகமா இயேசுவா நான் மதம் மாற சொன்னால் மாறப் போகிறீர்களா நீங்கள்??ஆனால் நான் இந்து அல்ல.. நாங்கள் இந்துக்கள் அல்ல. நான் என்ன மதம் பரப்ப வந்த ஜியு போப், கால்டுவெல்லா? எனக்கு இதுதான் வேலையா? உங்களை மதம் மாற்றி மந்திரிச்சு விடுறதுதான் என் வேலையா? நான் என் வேலை வேறு. இயக்குநர் அமீர் என்னை ஆதரிக்கவில்லை. அவரது பாதை வேறு. எங்கள் பாதை வேறு. இயக்குநர் அமீர் மதமா பார்க்கிறார்.. நான் மொழி, இனமாகப் பார்க்கிறேன்.

தமிழர்களுக்கு கோயில்கள் என்பது வழிபாட்டுத்தலங்கள் மட்டும் அல்ல.. வரலாற்று பேராவணம்.

ஆட்டுக்கு தாடி… நாட்டுக்கு ஆளுநர்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இல்லாத நடைமுறையாக ஆளுநருக்கு தற்போதைய திமுக அரசு அறிக்கை தருவது தவறானதாகவும். தவறான ஒரு முன்னுதாரணத்தை திமுக அரசு உருவாக்குகிறது. பேரறிஞர் அண்ணா, ஆட்டுக்கு தாடி… நாட்டுக்கு ஆளுநர் என பேசியது எல்லாம் எதற்காக? பொதுவாக ஆளுநர் என்பவர் அரசு விழாக்களில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். ஆளுநர் உரை என்றால் எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டுப் போகக் கூடியவர். தேவை இல்லாத முன்னுதாரணங்கள் தவறானவை.

நாம் தமிழரின் பி டீம் திமுக:

மீனவர் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு என்ன? வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?கருணாநிதியும் திமுகவும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு செய்த ஒரே ஒரு நன்மை என்ன? ஒரே ஒரு நன்மையை சொல்ல முடியுமா? குஜராத் கலவரத்தில் பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த போது மோடிக்கு ஆதரவாக திமுகவின் டி.ஆர்.பாலுவும் வைகோவும்தான் பேசினார்கள். குஜராத் கலவரத்தை கருணாநிதி கண்டித்து வெளியிட்ட ஒரு அறிக்கை இருக்கிறதா? நான் இந்துவே இல்லை என்கிற நான் உங்களுக்கு எதிரி.. ஆனால் 90% விழுக்காடு இந்துக்கள் உள்ள கட்சி திமுக என்கிறார் ஸ்டாலின். யார் பாஜகவின் பி டீம்? சி டீம்? சீமானுக்கு ஓட்டுப் போட்டால் மதம் மாற்றிவிடுவார் என்கிற பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். நான் வேல் எடுத்த போது விமர்சித்த நீங்கள், பாஜக வேலை கையில் எடுத்தபோது பாராட்டி முரசொலி பத்திரிகையில் தலையங்கமாக வெளியிட்டீர்கள். பிறகு உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் மற்றும் உங்கள் கட்சியினரும் வேல் தூக்குனீர்கள் நான் பிஜேயின் பி டீம் இல்லை..திமுக தான் நாம் தமிழரின் பி டீம் என கூறினாார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!