திருமங்கலம் அருகே திமுக – அதிமுக மோதல்… பரபரப்பு!

திருமங்கலம் அருகே திமுக – அதிமுக மோதல்… பரபரப்பு!

திருமங்கலம் நகராட்சியில் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள 3 கடைகள், பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகள், புல் பண்ணைக்கான ஏலம் இன்று (அக்.25) நடக்க இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று வரை நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்ட நிலையில்
நேற்று (அக்.24) மதியம் அ.தி.மு.க., நகரச் செயலாளர் விஜயன் தரப்பினர் சிலர் விண்ணப்பம் அளிக்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்த போது நகராட்சி கமிஷனர் அசோக்குமார் வெளியில் இருந்ததால், விண்ணப்பத்தை வாங்குவதற்கு அலுவலர்கள் மறுத்தனர். இதன்பின் கமிஷனர் உத்தரவின் பெயரில் மனுவை வாங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.


மனுவை கொடுக்கும் போது அ.தி.மு.க., தரப்பினர் அலைபேசி மூலம் வீடியோ எடுக்க முயன்றனர். அங்கிருந்த நகராட்சி தலைவர் ரம்யாவின் கணவர் முத்துக்குமார் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
காவல் ஆய்வாளர் லட்சுமி லதா தலைமையில் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஏலத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கமிஷனர் அசோக் குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வினர் அ.தி.மு.க., நகரச் செயலாளர் விஜயன் உள்பட 24 பேர் மீதும், அ.தி.மு.க.,வினர் முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் கொடுத்தனர். இதுதவிர நகராட்சி மேலாளர் ரமேஷூம் அ.தி.மு.க.,வினர் மீது புகார் கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!