“இந்தியாவில் இப்படி ஒரு கட்சியா!” பட்டா மாறுதலுக்காக வி.ஏ.ஓ. வாங்கிய லஞ்சத்தை திரும்ப பெற்றுத் தந்த சம்பவம்… எந்த கட்சி தெரியுமா?

லஞ்சம் என்பது தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவில் மிகவும் பிரபலமானது . நாட்டின் பல குடிமக்கள் குடும்ப அட்டை வாங்க, பட்டா பெயர் மாற்ற, மின்சாரம் பெற, இருசக்கர வாகன உரிமம் பெற, போன்ற பல்வேறு விஷயங்களிலும் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்லும் போது போலீஸ் அதிகாரிகள் நிற்பதைப் பார்த்து பயப்படுவதில்லை. இந்த அதிகாரிகளுக்கு சிறிய லஞ்சம் கொடுப்பதன் மூலம் அதிகாரிகள் தங்களை விட்டு விலகுவார்கள் என்பதையும், அவர்களிடம் எதையும் வசூலிக்க மாட்டார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பதால் அவர்கள் சட்டங்களை வெளிப்படையாக மீறுகிறார்கள்.

இந்தியாவில் லஞ்சம் வாங்குவது சட்டவிரோதமானது என்ற போதிலும், அதற்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், இந்த நடைமுறையைப் பயன்படுத்தி மக்களைத் தண்டிக்கப் பயன்படும் லஞ்சத்தின் நிலை இதுதான்.அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள், குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதது போன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவது போன்ற வழக்குகள் அன்றாடம் கேட்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் விதவிதமாக லஞ்சம் பெறும் செயலுக்கு எதிராக நின்று லஞ்சம் பெற்ற அதிகாரியிடம் இருந்து மக்கள் கொடுத்த லஞ்சப் பணத்தை திரும்ப பெற்று மக்களிடமே தரும் சுவாரஸ்யம் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த நிகழ்வை அறிவோம்: கடந்த மூன்று மாததிற்கு முன்பாக எனது இடத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் ருபாய் 2500 பெற்றுக்கொண்டார்.

நான் நாம் தமிழர் கட்சியின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் பொருளாளராக இருந்துவருகிறேன்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் ,மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈஸ்வரன் அவர்கள் வேலூர் தொகுதியில் ஒரு , வட்டத்தை இலஞ்சம் இல்லாத முன்மாதிரி வட்டமாக மாற்றுவதற்கான வேலை திட்டதிற்காக வந்திருந்தார்.

அவரிடம் நான் மேற்படி vao விடம் இலஞ்சமாக இழந்ததை பற்றி கூறினேன், அதன் பேரில் வேலூர் தொகுதி செயலாளர் செ.இளங்கோவன் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மரு.சு.கு.இமயவரம்பன் இப்பாசறை தொகுதி செயலாளர் மு.முருகேசன் மற்றும் உறவுகளுடன் மேற்படி கிராம நிர்வாக அலுவரிடம் அழைத்து சென்று அவரிடம் பேசி , நான் இழந்த இலஞ்சப் பணம் ரூபாய் 2500ஐ எனக்கு திரும்பப்பெற்று தந்தார்.

எனவே நமது உறவுகளும் , பொது மக்களும் தங்கள் தேவையை இலஞ்சம் தராமலும் , இழந்த இலஞ்சப் பணத்தை திரும்பபெற்றிடவும் நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேலூர் மாநகராட்சியில் குடியிருந்து வரும் முருகேசன் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரிகள் லஞ்சம் பெறுவதும் அதை கண்டுகொள்ளாமல் ஆட்சி நிர்வாகம் செய்வதும் மேலும் பல கட்சிகளும் இதை எதிர்த்து கேள்வி கேட்காமல் கண்டும் காணாமல் இருந்து வரும் கட்சிகளுக்கு மத்தியில் தமிழகத்தில் குறிப்பாக இந்தியாவிலேயே இப்படிப்பட்ட கட்சியா என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.

லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!

நாம் தமிழர் கட்சியின் லஞ்ச ஒழிப்பு பாசறை என்றால் என்ன? அதனூடாக என்ன செய்கிறார்கள்?

  • கையூட்டு என்றால் இலஞ்சம் என்று பொருள். இலஞ்சம் எனும் சொல் தமிழ்ச்சொல் அல்ல இப்படி தமிழ் அல்லாத பல சொற்களை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். இதை தவிர்க்கவே கையூட்டு என்று பெயரிடுகிறோம்.
  • நாம் ஏற்றிருக்கும் இந்திய ஒன்றியத்தின் சட்டப்படி ஒவ்வொரு அரசு துறைக்கும், அதன் கீழ் உள்ள உப துறைகளிலும் மக்கள் சேவையாற்றும் அரசு ஊழியர் யாரேனும் தங்கள் சம்பளம் தவிர தங்களின் கடமையை செய்வதற்கோ, வேகமாக செயல்படுத்துவதற்கோ, விதிமுறைகளை மீறி செயல்படவோ பணம், பொருள் அல்லது அதற்க்கு சமமான வேறு எந்த பிரதிபலனையும் நாடினால் அது கையூட்டு என்றாகும்.
  • உதாரணத்திற்கு ஒரு குடும்ப அட்டை (RATION CARD) வாங்குவதற்கு வெறும் ரூ 60 மட்டுமே அரசுக்கு நாம் கட்டவேண்டிய தொகை அது தவிர்த்து அந்த பணியை செய்து முடித்த அரசு அலுவலருக்கு தேநீர் வாங்கிக்கொடுத்தாலோ, படிவம், மனு எழுத பேணா, பேப்பர் போன்ற பொருட்களை இலவசமாக மக்களிடம் வாங்கிவரச்சொல்வது போன்ற சிறு செயல்கள்கூட கையூட்டு எனப்படும்.
  • இத்தகைய சிறிய தவறுகள் செய்தாலே குற்றம் என்றால் பெரும் பணம் அல்லது பொருள் பெற்று அரசாங்க சேவைகளை முறையின்றி செய்யும் அனைவரும் குற்றவாளிகளே.
  • அத்தகைய குற்றங்களை தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்க்கும் கையூட்டை மற்றும் ஊழலை தடுத்திடவும் ஐயா நேர்மைமிகு. திரு ஈஸ்வரன் அவர்களால் தொடங்கப்பட்டு, தனி மனிதனாக கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இந்த சேவையை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
  • தமிழ் பற்றாலரும் தமிழ் தேசிய சிந்தனையாளருமான ஐயா ஈசுவரன் அவர்களின் சேவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன்.சீமான் அவர்களால் ஈர்க்கப்பட்டு, தமிழர் அறம் சார்ந்தும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நிவாகம் செய்ய உறுதியேர்த்து அதை நடைமுறை படுத்திவரவும், நல்ல செயல்களுக்கு ஆதரவு தரும் வண்ணம், குறுகிய வட்டத்தில் செய்துகொண்டிருந்த சேவையை இத்தமிழகமெங்கும் கொண்டுசென்றிட உதித்தது தான் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
  • இது நாம் தமிழர் கட்சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்பட முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
  • ஆகையால் ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் படித்த விபரம் உள்ள இளைஞர்கள் தமது பகுதிகளில் நடக்கும் கையூட்டு, இலஞ்சம், சட்ட விரோத, மற்றும் சட்டத்தை மீறும் செயல்களை பார்த்து கொதித்து என்ன செய்வது என்று புரியாமல் இதுவரை இருந்திருந்தால் இனியும் பொறுக்காமல் பொறுப்புடன் தங்கள் பகுதிகளில் இப்பணியை நீங்களே செய்திட நாம் பயிற்சியுடன் ஆதரவும் தருகிறோம்.
  • இளைஞர்கள் கையில் தான் இனி புதிய நாடு என்ற காலம் ஐயாவின் கனவை நினைவாக்க நாம் தமிழர் கையூட்டு ஒழிப்பு பாசறையில் உடன் சேர்ந்து பணியாற்றிட வாரீர்.
  • என்ன செய்கிறார்கள் :
  • திருப்பூர் இடுவாய் ஊராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி போட நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை உறுப்பினர் மணிவண்ணன் என்பவரிடம் 5100ரூ இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பின்பே வரிபோட்டுள்ளனர்.
  • நாள் 27/5/19 திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு் இழந்த இலஞ்சப்பணம் 5100 ரூபாயை நம் உறுப்பினருக்க திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
  • இதை போல் மக்களின் பல லட்சக்கணக்கான பணத்தை கையூட்டு பாசறையின் மூலமாக பெற்றுக் கொடுத்தது ஏறாலம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!