அரோகரா… திருப்பரங்குன்றம் மலைமீது மகாதீபம்… ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி தெய்வானையுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று காலை உற்சவரான சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 3 1/2 அடி உயரம், 2 1/2 அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடாத் துணி, 3 கிலோ கற்பூரம் கொண்டு பூஜை செய்யப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 16 கால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பக்தர்கள் முன்பு நடைபெற்றது.

கோவில் நிர்வாகம் மேற்பட்ட காவல் துறையினர் இதில் திருப்பரங்குன்றம் மலை மீது கூடுதல் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய ஆயுத படை காவலர்கள் ஆறு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மலை மீது நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!