காலில் கொலுசு அணிவதால் இவ்வளவு நன்மையா.? இத்தன நாள் இது தெரியாம போச்சே.!

வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது. குதிகால் நரம்பை தொட்டுக்கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும்.

ஆரம்பகாலந் தொட்டே நகைகள் அணிதல் பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறப்பாக பெண்கள் அணியும் ஒவ்வொரு நகையின் பின்னும் உடலிற்கு பலன் தரக் கூடிய ஒவ்வொரு காரணம் காணப்படுகிறது. அதுப் போன்றே கால்களில் அணியப்படும் கொலுசும். சிறு வயதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு பூட்டி அழகுப் பார்க்கும் வழக்கம் உண்டு. வளர்ந்த பின் ஆண்கள் கொலுசு அணிவதில்லை ஆனால், பெண்கள் கொலுசு அணியும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

அநேகமானோர் தங்க கொலுசை விட அநேகமாக வெள்ளி கொலுசு அணிவது வழக்கம். இதற்கான சமய ரீதியான காரணம் தங்கம் மாகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுதலாகும் ஆனால், அறிவியல் ரீதியான காரணத்தினை நோக்குவோமானால் வெள்ளி உலோகத்திற்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மையுண்டு. இதனால் வெள்ளியில் கொலுசு போடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப வெள்ளிக் கொலுசில் கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!