Chris Gayle Meets Preity Zinta for IPL 2023 Entry in PBKS | ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு களமிறங்குகிறாரா? கிறிஸ் கெயில் – ப்ரீத்தி ஜிந்தா சந்திப்பு !

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அண்மையில் தாய்மை அடைந்த அவர், பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கூட பங்கேற்கவில்லை. ஏலத்தில் தவறவிட்டது வருத்தமாக இருப்பதாக தெரிவித்த அவர், விரைவில் இந்தியா வந்து ஐபிஎல் பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, ஐபிஎல் 2 ஆம் பகுதி ஆட்டங்களுக்கு நேரில் வந்து பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.  

மேலும் படிக்க | முடிவுக்கு வரும் 2 வீரர்களின் இந்திய அணி வாய்ப்பு – பிசிசிஐ அதிரடி முடிவு

அவரது வருகை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது இன்னொரு சர்பிரைஸ் விஷயத்தை தெரிவித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. அமெரிக்காவில் இருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலை சநித்துள்ளார். அவருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு ஐபிஎல் வட்டாரத்திலும் உற்று நோக்கப்படுகிறது. ஏனென்றால் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய கிறிஸ் கெயில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு திரும்ப உள்ளதாக கூறியிருந்தார். 

வீரராக வருவாரா? அல்லது பயிற்சியாளராக வருவாரா? என்பது குறித்து தெரிவிக்காத கெயில், தான் விளையாடிய அணிகளில் இதுவரை கோப்பைகளை வெல்லாத பெங்களுரு மற்றும் பஞ்சாப் அணிகளில் ஏதேனும் ஒரு அணியுடன் இணைந்து பயணிப்பேன் எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்தப் பேட்டிக்குப் பிறகு பெங்களுரு அணி, ஹால் ஆப் பேம் விருது கொடுத்து கெயிலை கவுரவித்திருந்தது. இதனால், பெங்களுரு அணியுடன் இணைவார் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ப்ரீத்தி ஜிந்தாவை சந்தித்திருக்கிறார் கெயில். 

மேலும் படிக்க | மும்பையில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய ரோகித்சர்மா – வைரல் வீடியோ

ஒருவேளை அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் குறித்து இருவரும் பேசியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கும்பிளே பயிற்சியாளராக இருக்கும் பஞ்சாப் அணியின் ஆட்டம் சிறப்பாக இல்லாததால் புதிய பயிற்சியாளரைக் கொண்டு வர அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, கெயில் போன்ற மூத்த வீரர்களை களமிறக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான சந்திப்பாக கூட இருக்கலாம் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

நன்றி

Leave a Reply

error: Content is protected !!