அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடுமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்ததாக விடமுயற்சி படப்பிடிப்பில் இணையவுள்ளார் நடிகர் அஜித்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களால் சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் மற்றும் பதான் ஆகிய இரு திரைப்படங்கள் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் – ஷாருக்கான்
ஷாருக்கான் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அசோகா. இப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் அஜித் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அஜித் மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைந்து நடித்த இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.