
மேட்டூர்: சேலம் மக்களவைத் தொகுதியில் 5,66,085 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் செல்வகணபதி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 4,95,728 வாக்குகள் பெற்று 2-வது இடம், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 1,27,139 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தவிர, மீதமுள்ள தொகுதிகளில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அனைத்து சுற்றிலும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் முன்னிலையில் இருந்தார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி 77,522 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 1,23,842 வாக்குகளும் பெற்றனர். வித்தியாசம் 46,320 வாக்குகள். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது சொந்த தொகுதியில் செல்வாக்கை நிரூபித்துள்ளார். எனினும், மீதமுள்ள சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஓமலூர் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளரைவிட, திமுக வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.