மதுரையில் ரஜினி சிலை முன்பு கழுகு சிலை பிரதிஷ்டை

( யாகசாலையில் பூஜை நடத்தி குடும்பத்தினருடன் வழிபாடு )

 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (50) என்பவர் கடந்த பல வருடங்களாக நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக,
    தான் வசிக்கும் வீட்டின் இரண்டு அறைகள் முழுவதும் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள காட்சிகளை அவருடைய உருவங்களை சுவர்கள் முழுவதும் ஒட்டப்பட்டும் , கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 250 எடை கொண்ட கருங்கல்லினாலான ரஜினியின் முழு உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து,ரஜினி கோவிலாக வடிவமைத்து நாள்தோறும் ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபடுவதுடன்,  ரஜினியின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளின் போது அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்த நிலையில்,
   இன்று 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினாலான கழுகு -க்கு சிலை செய்து, ரஜினி சிலை முன்பு பிரதிஷ்டை செய்து யாகசால பூஜைகள் நடத்தி,  ரஜினி ரசிகரான கார்த்திக் தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
    ரஜினிக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் , அவருடன் தனது குடும்பம் சந்திக்கும் தருணம் கிடைக்க வேண்டியும் இப்பூஜைகளை நடத்துவதாக தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!